9 கேள்விக்கு  பதிலாக நேரடியாக 5 கோடி கேட்டிருக்கலாம்

9 கேள்விக்கு பதிலாக நேரடியாக 5 கோடி கேட்டிருக்கலாம்

பாமகாவின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் முழுவதும் பிளாக்மெயில் பாலிடிக்ஸ் தான் என்பது அனைவருக்கும் தெரியும். முதன்முதலில் ரிலையன்ஸ் தமிழகத்தில் திறக்கப்பட்டபோது, அந்த நிறுவனம் இனி ஒரு இடத்தில் கூட இருக்காது, அதை அடித்து நொறுக்குவோம் என்று கூறிய டாக்டர் ராமதாஸ், அதற்காக கடுமையான அறிக்கைகளையும் வெளியிட்டார். ஆனால் ஒரு வார காலத்திற்குள்ளாகவே பெட்டிப்பாம்பாக அடங்கி விட்டார். அந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். ஜெய்பீம் படத்தில் அந்த குறிப்பிட்ட காட்சி வன்னியர்களை உறுத்துகிறது என்றால் அதை வன்னியர்களே நம்ப மாட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் வன்னி அரசு, பாமகவை கடுமையாக விமர்சித்துள்ளார்

அரசியல் செய்திகள்