அரசுக்கு 500 கோடி ரூபாய் இழப்பு ஓபிஎஸ் குடும்பத்தால்?

அரசுக்கு 500 கோடி ரூபாய் இழப்பு ஓபிஎஸ் குடும்பத்தால்?

ஓபிஎஸ் -சின் 3 பிள்ளைகள் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனம் பாஷ்யம் ரியல் எஸ்டேட் நிறுவனம், அந்த நிறுவனத்தின் பெயரிலான காரைத் தான் ஓபிஎஸ் உட்பட அவரது குடும்பத்தினர் தற்போது வரை பயன்படுத்தி வருகின்றனர். பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு சந்திப்பு அருகேயுள்ள 10.5 ஏக்கர் இடத்தை பாஷ்யம் நிறுவனத்திற்கு சதுர அடி 12,500 க்கு விற்பனை செய்துள்ளனர், ஆனால் அந்த இடத்தின் மார்க்கெட் மதிப்பு சதுர அடி 25,000 ரூபாய் ஆகும்.

கடந்த 8.2.21 அன்று, அதாவது தேர்தல் அறிவிப்பு வெளியான 10,15 நாட்களுக்கு முன்பாக விற்பனை செய்ய அதிமுக அரசு சார்பில் உத்தரவு போடப்பட்டு உள்ளது. சட்டப்படி அரசு இடத்தை தனியாருக்கு விற்க கூடாது , மருத்துவமனை உள்ளாட்சி கட்டடம் , கல்லூரி , பள்ளி கட்டுமானத்திற்காக மட்டுமே தனியாருக்கு வழங்கலாம். ஏலத்தில் மூலம் விற்கலாம். இதனால், அரசுக்கு 500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிலம் விற்பனை செய்வதற்கு துறையின் அமைச்சராக இருந்த ஆர் பி உதயகுமார் முக்கிய காரணமாக இருந்துள்ளார். நிலத்தை விற்பனை செய்ய ஒரே வாரத்தில் சிஎம்டிஏ அப்ரூவல் கிடைத்துள்ளது என்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி குற்றச்சாட்டு.

அரசியல் செய்திகள்