5 ஆயிரம் நிவாரணம் – விஜயகாந்த் கோரிக்கை

5 ஆயிரம் நிவாரணம் – விஜயகாந்த் கோரிக்கை

ஒவ்வொரு ஆண்டும்‌ மழை வெள்ளத்தில்‌ சிக்கி மக்கள்‌ தவிக்கும்‌ நிலை தவறாமல் ஏற்படுகிறது. ஆனால்‌, தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும்‌ அதிமுகவும்‌, திமுகவும்‌ அதற்கு நிரந்தரத் தீர்வு காணவில்லை.

மழை வெள்ளத்தில்‌ பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்குக் காலம்‌ தாழ்த்தாமல்‌ தலா ரூ.5 ஆயிரம்‌ நிவாரணத் தொகை வழங்க வேண்டும்‌. வெள்ளத்தால்‌ பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்‌. தேங்கி நிற்கும்‌ மழை நீரில்‌ கொசுக்கள்‌ உற்பத்தியாகி, நோய்‌த்தொற்று பரவும்‌ அபாயம்‌ உள்ளதால்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்‌ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசியல் செய்திகள்