முதலீடுகளை ஈர்ப்பதில்  இந்தியா 4-வது இடத்துக்கு முன்னேற்றம்

முதலீடுகளை ஈர்க்கும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தை வகிக்கிறது.  டாவோஸ்ல் தொடங் கும் சர்வதேச பொருளாதார கூட்டமைப்பின் (டபிள்யூஇஎப்) மாநாட்டில் இந்தத் தகவல் வெளி யாகியுள்ளது.

அமெரிக் காவுக்கு அடுத்து முதலீடுகளை ஈர்க்கும் நாடாக சீனா இருப்பினும் மதிப்பீட்டு பட்டியலில் இரு நாடுகளுமே சரிவைச் சந்தித்துள்ளதாக பிடபிள்யூசி தெரிவித்துள்ளது.

91 நாடுகளைச் சேர்ந்த 1,300 சிஇஓக்க ளிடம் கருத்துகேட்கப்பட்டு  இது தயாரிக்கப் பட்டுள்ளது. இதில் இந்தியா மீதான அபிப்ராயம் 9 லிருந்து 8 சதவீதமாகவும், 46 லிருந்து அமெரிக்கா தற்போது 27 சதவீதமாகவும், 33 லிருந்து சீனா தற்போது 24 தவீதமாகவும், ஜெர்மனி 20 லிருந்து 13 சதவீதமாகவும் சரிந்துள்ளது.

பெரும்பாலான சிஇஓக்கள் இந்தியா, ஜெர்மனியில் முதலீடு செய்வதை விரும்புவதாகத் தெரிவித்தனர். பிரிட்டனைக் காட்டிலும் முதலீடுகளை ஈர்க்கும் நாடாக இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது. ஜப்பான், இங்கி லாந்து ஆகிய நாடுகள் இந்தி யாவுக்கு அடுத்து வருகின்றன.

பெரும்பாலான சிஇஓக்களின் நம்பகத்தன்மை கொண்ட நாடாக இந்தியா திகழ் வதாகவும் பிடபிள்யூசி தெரி விக்கிறது.

 

JAKS Infomedia 2015