சிறு, குறுந் தொழில்களுக்கான ஜிஎஸ்டி வரம்பு உயர்வு

பொதுத்தேர்தலுக்காக, இழந்த மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு பாஜக அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை தொடர்ச்சியாக எடுத்துவருகிறது.

சிறு, குறுந் தொழில்களுக்கான ஜிஎஸ்டி விலக்கு வரம்பை மத்திய அரசு இரண்டு மடங்காக உயர்த்தி சிறு, குறுந் தொழில் செய்வோரின் வரி வரம்பை ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ. 40 லட்சமாக உயர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

வட கிழக்கு மாநிலங்களில் வரிவிலக்கு வரம்பு ரூ. 10 லட்சமாக உள்ளது. இது ரூ. 20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

மேலும், ரூ. 1 கோடி வரையில் வருமானம் ஈட்டும் உற்பத்தி துறையினருக்கு, காம்போசிஷன் திட்டத்தின் கீழ் ஒரு சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பும் ரூ. 1.5 கோடி யாக உயர்த்தப்பட்டுள்ளது. சேவைத்துறையினருக்கு 6 சதவீ தமாக வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வரும் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன