பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவுக்கு அதிமுகவிலிருந்து கல்தா

துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா அதிமுகவிலிருந்து அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

ஓ.ராஜா. தேனி வட்டாரத்தில் இவர் மிகவும் பிரபலம். ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கை வைத்தே பெரியகுளம் நகராட்சி தலைவர் பதவியை பிடித்தவர்.

இவர் மீது கோயில் பூசாரி நாகமுத்து தற்கொலை, அதிகாரிகளை மிரட்டுவது, வைகை ஆற்றுப்படுகையில் மணல் திருடுவது என்று ஏராளமான குற்றச்சாட்டுகள் இருக்கிறது.

காலையில் மதுரை மாவட்ட கூட்டுறவு பால் ஒன்றியத் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார் ஓ.ராஜா. ஆனால் மாலையில் கட்சியை விட்டு தூக்கப்பட்டுள்ளார். இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் ஆகியோர் தற்போது தீவிரமாக தேனி மாவட்டத்தில் களம் இறங்கி உள்ளனர். அதோடு சொந்த தொகுதி என்பதால் துணை முதல்வருக்கு உதவியாகவும் பல்வேறு வகைகளில் தங்களை ஈடுபடுத்தி வரும் நிலையில் அவரது தம்பி ஓ.ராஜா இவர்களது வளர்ச்சிக்கு இடையூராக இருப்பதால் இந்த முடிவு என்று அதிமுக வட்டாரத்தில் பேச்சுத.