5 மாநில தேர்தல் முடிவுகள்:

காங்கிரஸ் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அதிக இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சத்தீஸ்கரில் அபார வெற்றி பெற்றுள்ளது.

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க தங்கள் கட்சி ஆதரவளிக்கும் என மாயாவதி கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் அவர் கட்சி இரண்டு இடங்களிலும், ராஜஸ்தான் மாநிலத்தில் ஆறு இடங்களிலும் வென்றுள்ளது.

இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 65 நாடாளுமன்ற தொகுதிகளில் 62 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியது. இந்தி மொழி பேசப்படும் இந்த பகுதிகளில் பா.ஜ.க வலுவாகவே இருந்து வந்துள்ளது.

தோற்கடிக்க முடியாத பிரதமர் என்ற பிம்பம் உடைந்திருப்பது வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளுடனான கூட்டணி பேரத்திற்கும் உதவும்.

மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தை வழிநடத்திய ராகுலின் பிம்பம் வெகுவாக உயர்ந்திருக்கிறது.