விஸ்வாசம் vs பேட்ட

பொங்கலுக்கு ரஜினியின் ‘பேட்ட’ யும், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படமும் வருகின்றன. இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இரண்டு படங்களுக்கும் மோதல் கடுமையாக இருக்கும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகின்றனர். ‘விஸ்வாசம்’ படத்தின் தமிழக உரிமையை வாங்கிய கே.ஜே.ஆர்.ராஜேஷ்,  75 சதவிகித தியேட்டர்களை புக்கிங் செய்து விட்டாராம்.பெரும்பாலான தியேட்டர்கள்  மல்டி பிளக்ஸ் என்று தெரிகிறது.

இந்நிலையில், பேட்ட படத்தின் விநியோக உரிமை குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது. கபாலி தயாரிப்பாளரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான  தாணு,  பேட்ட படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றி உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்  இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் படம் பேட்ட என்பதால் போட்டி  கடுமையாக  இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன