சேலத்தில் கமல்

கமல் கூட்டத்திற்கு போலீஸ் தடை விதித்த காரணத்தால் சேலத்தில் சலசலப்பு.

‘மக்களுடன் நம்மவர்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் கமல்ஹாசன்.

சேலம் மகுடஞ்சாவடியில் இன்று நடைபெறும் கூட்டத்தில் கமல் பேசுவதற்காக மேடை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததாக தெரிகிறது.

இதையெல்லாம் பொருட்படுத்தாத கமல், காரில் நின்றபடியே பேச ஆரம்பித்தார்.

“மக்களுடன் பேசுவதற்காக மேடை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனுமதி மறுக்கப்பட்டுள்ள காரணத்தால் நடுத்தெருவில் இருந்து உங்களிடம் பேசுகிறேன். எவ்வளவு தடைகள் இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் இந்த காளை!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சி தான் இந்த பதட்டத்திற்கு காரணம. சட்டசபையில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தபோது பொறுப்புள்ள அரசியல் கட்சியாக நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்