மாணவி கனிமொழிக்கு கமல்ஹாசன் ரூ.5 லட்சம் நிதியுதவி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த மாணவி கனிமொழி  தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., நான்காம் ஆண்டு படிக்கும் இவர் பண வசதி இல்லாமல் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

தந்தை பிச்சைமணி கூலி வேலை செய்தும் கடன் வாங்கியும் படிப்புக்கு, கட்டணம் செலுத்த முடியாத நிலையில், மாணவி கனிமொழி விடுமுறை நாட்களில் விவசாய கூலி வேலைகளுக்கு சென்று பணம் திரட்ட முயன்றுள்ளார்.

அண்மையில் ஊடங்களில் இவரைப் பற்றிய செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாணவி படிப்பைத் தொடர ரூ.5 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.