சிட்னியில் இரண்டு விஞ்ஞானிகள் சந்திப்பு

மு.க.அழகிரி இன்று திடீரென அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் சந்திப்பு நடத்தியது மதுரையில் ‘ஹாட் டாக்’ ஆனது.

மு.க.அழகிரி மதுரையில் மட்டும் அரசியல் நடத்தி வருபவர் .

அண்மையில் தெர்மாகோல் விஞ்ஞானி செல்லூர் ராஜூ அளித்த ஒரு பேட்டியில், ‘திமுக.வுக்கு அழகிரி தலைவர் ஆகியிருந்தால்கூட நாங்கள் கவலைப்பட்டிருப்போம். அவர் வேகமாக செயல்படக்கூடியவர். என்று பாராட்டினார்

இன்று காலையில் திடீரென செல்லூர் ராஜூவை அவரது இல்லத்திற்கு சென்று அண்மையில் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் இறந்ததையொட்டி துக்கம் விசாரித்தார்.

நிருபர்களிடம் பேசிய மு.க.அழகிரி, ‘ துக்கம் விசாரிக்கவே வந்தேன். நீங்கள் நினைப்பது போல வேறு ஒன்றும் இல்லை’ என குறிப்பிட்டார்.