மிகவும் மோசமான இயற்கை பேரிடர்” – மத்திய அரசு அறிவிப்பு

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் நிகழ்ந்த சேதம் குறித்து இன்று அறிவிப்பு வெளியிட்டது மத்திய அரசு.

“அதி தீவிரமான இயற்கை பேரிடர் என தெரிவித்துள்ள மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துள்ளது.

மழை – வெள்ளத்திற்கு 247 பேர் உயிரிழந்து விட்டதாகவும், 17 ஆயிரத்து 343 பேர் வீடுகளை இழந்து விட்டதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளதாக மத்திய அரசு, தமது அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளது.

தென் மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக கேரளாவில் வீடுகள், குடிசைகள் இடிந்து உள்ளதாகவும், இது அதி தீவிரமான இயற்கை பேரிடர் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, விரும்பிய தொகையை, கேரளாவுக்கு நிவாரணமாக வழங்க முடியும்.