13 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மம்தா கட்சிக்கு தாவல்

பிரதமர் வேட்பாளராக களமிறங்கியுள்ள மம்தா பானர்ஜி, தனது கட்சியை அதிரடியாக விரிவுபடுத்தி வருகிறார். கோவா, திரிபுராவைத் தொடர்ந்து மேகாலயாவில் அழுத்தமாக தடம் பதித்துள்ளது மம்தா வின் திரிணாமுல் காங்கிரஸ். மேகாலயா மாநில முன்னாள் காங்., முதல்வர் முகுல் சங்மா உட்பட 13 காங்., எம்.எல்.ஏக்கள், நேற்று திரிணாமுல் காங். கட்சிக்கு தாவினர். வடகிழக்கு மாநிலங்களை பாஜகவிடம் காங்கிரஸ் இழந்து விட்ட நிலையில், பாஜகவுக்கு மாற்று திரிணாமுல் தான் என்ற தோற்றத்தை உண்டாக்கி வருகிறார் மம்தா பானர்ஜி.

அரசியல் செய்திகள்