11 வது நாளாக  பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை?

11 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை?

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன, நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை என்று கதை சொன்ன மத்திய அரசு, இடைத்தேர்தல் தோல்விக்கு பின் அவசர அவசரமாக பெட்ரோல் மீதான கலால் வரியை குறைத்தது. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் பெரிய மாற்றமில்லை என்றாலும், விலை என்னவோ தினமும் மாறிக் கொண்டு தான் இருக்கிறது. இருந்தாலும் மத்திய அரசின் ஆணைக்கிணங்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கையையும், வாயையும் கட்டிக்கொண்டு அமைதியாக உள்ளன. அடுத்த வருடம் வரும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் வரை தொடரும் என்பது நிச்சயமில்லை. பெட்ரோல், டீசல் விலையேற்றம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொறுமை எதுவரை என்பதை பொறுத்து மாறுபடும்.

அரசியல் செய்திகள்