1000 பேர் திரண்டால் – காடுவெட்டி மகன் காமெடி

1000 பேர் திரண்டால் – காடுவெட்டி மகன் காமெடி

மறைந்த பாமக நிர்வாகி காடுவெட்டி குருவின் மூத்த மகன் கனல் அரசன். இவர் தனது தந்தை இறந்த போது அன்பு மணியும், ராமதாஸும் மருத்துவ கொலை பண்ணி விட்டார்கள் என்று குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து இவரும் இவர் மச்சானும் பாமகவினரால் தாக்கப்பட்டனர். சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “ஜெய்பீம் பட விவகாரத்தை வன்னிய சமூக மக்கள், மிக பொறுமையாக, அமைதியாக கையாண்டு கொண்டிருக்கிறார்கள். சூர்யாவின் வீட்டிற்கு முன்னால் 1000 பேர் ஒன்று திரண்டால் அவரால் எதுவும் செய்ய முடியாது. 5 துப்பாக்கி ஏந்திய போலீசாரால் சூர்யாவை காப்பாற்றி விட முடியாது என்று நகைச்சுவையாக தமிழ்நாடு போலீஸை விமர்சித்து பேசியிருக்கிறார்.

நகைச்சுவை செய்திகள்