ஹலோ நான் முதலமைச்சர் வேட்பாளர்

ஹலோ நான் முதலமைச்சர் வேட்பாளர்

ஹலோ நான் முதலமைச்சர் வேட்பாளர்-எடப்பாடி பழனிச்சாமி, அப்படியா இருந்துக்கோ என்ற பாணியில் பாஜகவின் ‘அகர முதல எழுத்தெல்லாம்’ எல்.முருகன் தொடங்கி அல்லக்கைகள் நாராயணன் வரை அதிமுகவை வைத்து செய்கிறார்கள். மோடியா லேடியா என்று சூளுரைத்த அதிமுகவின் மரியாதை இப்போது அதலபாதாளத்தில்.

அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜீ முதல் புகழேந்தி வரை எதிர் வினை யாற்றினாலும் பாஜகவினர் கண்டு கொள்ளவேயில்லை. எல்.கணேசன் போன்றோர் நிதர்சனத்தை உணர்ந்து பேசினாலும், பாஜகவின் புதுவரவுகள் அதிமுக தலைமையை சட்டை செய்வதேயில்லை.

பெட்ரோல் விலைக்கு அரிய விளக்கம் கொடுத்த ‘பொருளாதார புலி’ யான பாஜகவின் அண்ணாமலை ஒருபடி மேலே போய் பாஜக தலைமை பிஸியாக இருப்பதால் இப்போதைக்கு முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு இல்லை என்கிறார்.

இப்போ லேட்டஸ்டாக மத்திய அமைச்சர் ‘பிரகாஷ் ஜவடேகர்’ தமிழக முதல்வர் வேட்பாளர் பற்றிய கேள்வியை தவிர்த்து அதிமுக தலைமையை வெறுப்பேற்றியிருக்கிறார். 

இதில் மிக சந்தோஷமாக இருப்பது துணை முதல்வர் தானாம்.

political