ஸ்மார்ட் சென்னைக்கு 1000 கோடி செலவழித்தாரா இபிஎஸ்?

ஸ்மார்ட் சென்னைக்கு 1000 கோடி செலவழித்தாரா இபிஎஸ்?

எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் நேரத்தில் பேசிய பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், சென்னை மாநகரை ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு தண்ணீர் நிற்காமல் சீரமைத்து உள்ளதாக பேசியுள்ளார் என்று அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியிருக்கிறார்.

அதாவது சென்னை நகரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைத்து விட்டதாகவும், இனி தண்ணீரே நிற்காது என எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இதுவே பெரிய ஆதாரம். எனவே இதை வைத்தே எடப்பாடி பழனிச்சாமியை தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என்றும் புகழேந்தி அரசுக்கு ஆலோசனை வழங்கினார்.

அரசியல் செய்திகள்