ஸ்டாலின் & சீமான் – சாதி சாக்கடை சண்டை

ஸ்டாலின் & சீமான் – சாதி சாக்கடை சண்டை

ஜெய்பீம் படத்தை விமர்சித்து அன்பு மணியின் சாதிய கருத்துக்களுக்கு ஆதரவாக சில விஷயங்களை பதிவிட்டிருந்தார் சீமான், அதைக் கண்டித்து திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ‘திரௌபதி, ருத்ரதாண்டவம்’ படங்களில் தலித்துகளை இழிவுபடுத்தும் காட்சிகள் இருந்தபோது குரல் எழுப்பாத சீமான், அக்னிகலசத்துக்கு மட்டும் பொங்குவது குறித்து ‘#சாதி சாக்கடை சீமான்’ என்று விமர்சித்து வருகின்றனர்.

பெரம்பலூர் ரெட்டி நலச்சங்க விழாவில் அமைச்சர்கள் கே.எஸ்.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், கே.என்.நேரு ஆகியோர் பங்கேற்ற அழைப்பிதழையும், ”நாயுடு சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள் ஏ.வ.வேலு, கு.பிச்சாண்டி, பி.கே.சேகர்பாபு, ஆர்.காந்தி ஆகியோரை அமைச்சர்களாக நியமித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்ததற்கு நன்றி” என்ற போஸ்டரையும் வெளியிட்டு #சாதிசாக்கடை ஸ்டாலின்’ என்று திமுகவை கிண்டல் செய்து வருகின்றனர் நாம் தமிழர் கட்சியினர்.

அரசியல் செய்திகள்