ஸ்டாலினை பார்த்து குரைக்கும் அண்ணாமலை – ஈவிகேஎஸ்

ஸ்டாலினை பார்த்து குரைக்கும் அண்ணாமலை – ஈவிகேஎஸ்

தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையை விவரிக்கும் வகையில், மக்கள் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதாவது: “3 வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெற்றாலும் கூட, அதை மறுபடியும் கொண்டு வருவோம் என்று பாஜக மாநில தலைவர் பேசியிருக்கிறார்.. அவர் யாரென்றே எனக்கு தெரியாது… அண்ணாமலையோ, சின்னமலையோ, திருவாண்ணாமலையோ… யாராக இருந்தால் என்ன? இப்படியா பேசுவது என்று சிந்தித்து பாருங்கள்… பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் குரல் ஒழிக்கப்பட வேண்டிய குரலாகும். இதே மாதிரி இன்னொருத்தர் இங்கே இருக்காரு.. அவர் பேர் எச்.ராஜா..!இந்தியாவில் சிறந்த முதல்வராக ஸ்டாலின் திகழ்கிறார்.. முதல்வர் ஸ்டாலினை பார்த்து குரைப்பவர்களும் சூரியனை பார்த்து குரைப்பவர்களும் ஒன்றுதான் என்று பேசினார்.

அரசியல் செய்திகள்