ஷி ஜின்பிங் , மோடி ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

ஷி ஜின்பிங் , மோடி ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

உலகில் எஞ்சியிருக்கும் கம்யூனிச நாடான சீனாவின் கம்யூனிஸ்ட்டுகள் ‘ஜனநாயகம்’ என்ற வார்த்தையை அறவே வெறுக்கிறார்கள் என்றால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை ஆளும் பாஜக ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தையை அறவே வெறுக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் முகமாக களமிறங்கிய ஷி ஜின்பிங் , இப்போது கட்சியை விட அதிகாரம் மிக்க அதிபராக மாறி விட்டார். ஆர்எஸ்எஸ்ஸால் முன்னிறுத்தப்பட்ட மோடி தான் இப்போது ஆர்எஸ்எஸ் அடையாளம். மோடிக்கு இணையாக யாருமில்லை என்பதை தாண்டி, அடுத்த இரண்டு அடுக்குகளில் கூட மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் ஆர்எஸ்எஸ்ல் இல்லை.

ஷி ஜின்பிங்  கின் இன்றைய உயரத்திற்கு காரணம் நாடு பிடிக்கும் ஆசை, பண்டைய காலத்தில் தாங்கள் ஆண்ட நாடுகள் என்ற பழமைவாத சிந்தனையில் ஹாங்காங், தைவான், திபெத் என்று உலக அளவில் தனது எல்லையை விரிவுபடுத்த ஷி ஜின்பிங் எடுக்கும் கலவர முயற்சிகள் சீன கம்யூனிஸ்ட்களை மிகவும் வசீகரப்படுத்தியுள்ளது. இதனால் உலகில் அதிகம் பேரால் வெறுக்கப்படும் நாடாக சீனா மாறியுள்ளது. இதையே இந்தியாவுக்குள் செய்கிறார் மோடி, இந்தி பேசுபவர்கள் கட்சியாக இருந்த பாஜாகாவை, வகுப்பு வாத அரசியல் மூலம் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆளும் கட்சியாக மாற்றிய பெருமை மோடியையேச் சேரும்.

இரண்டு பேரும் தோற்றுப்போன ஒரே விஷயம் பொருளாதாரம். உலகின் சரி பாதிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நாடுகள் என்ற முக்கியமான விஷயத்தை மறந்து, தேவையில்லாத விஷயங்களில் ஈர்ப்பாகி தங்கள் நாட்டின் பொருளாதார நிலையை கேள்விக்குறி ஆக்கியுள்ளார்கள்.

அரசியல் செய்திகள்