ஷமிக்கு ஆதரவு, கோஹ்லி 9 மாத குழந்தைக்கு பாலியல் மிரட்டல்

ஷமிக்கு ஆதரவு, கோஹ்லி 9 மாத குழந்தைக்கு பாலியல் மிரட்டல்

டுவென்டி – 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், கடந்த 24ம் தேதி நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம், இந்திய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியன் பவுலர் முகமது சமியை குறிவைத்து விமர்சனங்கள் வெளிவந்தன. ராகுல் காந்தி உட்பட பெரும்பாலான தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் கண்டனம் தெரிவித்தனர். கேப்டன் கோஹ்லி ஒரு படி மேலே போய் இது போன்ற விமர்சனம் பண்ணுபவர்கள் மனநோயாளிகள் என்று கண்டனத்தை பதிவு செய்தார்.

இதனை தொடர்ந்து மனநோயாளி நபர் ஒருவர் ஆன்லைன் மூலம், இந்திய அணி கேப்டன் கோஹ்லியின் 9 மாத மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தார். தகவல் அறிந்த டில்லி பெண்கள் ஆணையம், தாமாக முன்வந்து விசாரணையை துவக்கி உள்ளது. இது தொடர்பாக டில்லி போலீஸ் துணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள கமிஷன், மிரட்டல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவரம், எப்ஐஆர் நகல், கைது செய்யப்பட்ட விவரம் தொடர்பாக 8 ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

டில்லி பெண்கள் கமிஷன் தலைவர் சுவாதி மாலிவால் கூறுகையில், டுவிட்டர் மூலம் 9 மாத குழந்தைக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட விதம் அவமானத்திற்குரியது.

அரசியல் செய்திகள்