லக்கிம்பூர் படுகொலை: ஆஷிஸ் மிஸ்ரா துப்பாக்கிச் சூடு நடத்தியது உண்மை

லக்கிம்பூர் படுகொலை: ஆஷிஸ் மிஸ்ரா துப்பாக்கிச் சூடு நடத்தியது உண்மை

லக்கிம்பூரில், விவசாயிகள் போராட்டத்தின் போது கார் மோதி விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா துப்பாக்கிச் சூடு நடத்தியதை தடவியல் துறை உறுதி செய்துள்ளது.

விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட போது, அவர்களது உடலில் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டதால், விசாரணை நடத்த பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளின் தோட்டாக்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஆஷிஸ் மிஸ்ராவின் துப்பாக்கியில் இருந்து ஒரு தோட்டா சுடப்பட்டிருப்பதை தடவியல் ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

அரசியல் செய்திகள்