யாரும் சீண்டவில்லை, தனித்து போட்டி – கிருஷ்ணசாமி

யாரும் சீண்டவில்லை, தனித்து போட்டி – கிருஷ்ணசாமி

கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். போலீசார் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி அளித்து இருப்பது மேலும் புதிய சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறிய அவர், புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழாவை முன்னிட்டு, உலக இந்துகள் ஒருங்கிணைப்பு மாநாடு நடத்தப்பட இருக்கின்றது எனவும், இந்துகள் மாநாடு என்பதை சிறுபான்மையினருக்கு எதிரானதாக கருத கூடாது எனவும் விளக்கம் கூறினார். மேலும் வர இருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்தே போட்டியிட இருப்பதாகவும், எங்களுடன் யாரும் கூட்டணி பேச வில்லை, நாங்களும் யாருடனும் பேசவில்லை என்றும் கூறினார்.

அரசியல் செய்திகள்