மோடி, அமித் ஷா  கூட்டத்திற்கு ஆள் திரட்ட அரசுப்பணம் – பிரியங்கா  குற்றச்சாட்டு

மோடி, அமித் ஷா கூட்டத்திற்கு ஆள் திரட்ட அரசுப்பணம் – பிரியங்கா குற்றச்சாட்டு

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டங்களுக்கு ஆள் திரட்டுவதற்காக குவார்ட்டர், பிரியாணி, பணம் மற்றும் போக்குவரத்து வசதிகள் வழங்குவது வழக்கம். இந்த பழக்கத்தை உத்தரப் பிரதேசத்தின் யோகி அரசு, அரசு பணத்தில் செயல்படுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘கொரோனா ஊரடங்கு காலத்தில், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள தங்கள் கிராமங்களுக்கு நடந்தே சென்றனர். அப்போது, மாநில அரசு அவர்களுக்கு பஸ் ஏற்பாடு செய்யவில்லை. ஆனால், இப்போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு ஆள் திரட்ட பொது மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மாநில அரசு பயன்படுத்துகிறது. இதற்காக மாநில அரசு பணத்தை கோடிக் கணக்கில் செலவு செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அரசியல் செய்திகள்