மோகன்லாலுக்குப் பிறகு துல்கர் தான் வசூல்ராஜா

மோகன்லாலுக்குப் பிறகு துல்கர் தான் வசூல்ராஜா

துல்கர் சல்மானின் குருப் திரைப்படம் உள்ளூர், வெளியூர், வெளிநாடு என திரையிட்ட அனைத்து இடங்களிலும் வசூலை அள்ளிக் குவிக்கிறது. வெளிநாடுகளில் அதிகம் வசூல் செய்த மலையாளப் படங்களில் பிரேமம் படத்தை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை குருப் பிடித்துள்ளது. முதல் இரண்டு இடங்களில் மோகன்லாலின் லூசிபர் மற்றும் புலி முருகன். மோகன்லாலுக்குப் பிறகு துல்கர் சல்மான் தான் மலையாள சினிமாவின் வசூல்ராஜா.

அரபு நாடுகளில் நேற்றுவரை 14 கோடிகளுக்கு மேல் குருப் திரைப்படம் வசூலித்துள்ளது, ரஜினியின் அண்ணாத்தே பட வசூலை மூன்று நாளில் குருப் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள்