மோகன்லாலின் மரக்கார் ஓடிடி யில்?

மோகன்லாலின் மரக்கார் ஓடிடி யில்?

மோகன்லாலும், ப்ரியதர்ஷனும் மீண்டும் இணைந்து உருவாக்கி இருக்கும் படம் ‘மரக்கார் – அரபிக் கடலின்டெ சிம்ஹம்’. இந்த வருட ஆரம்பத்தில், பின்னர் ஆகஸ்ட் மாதம் ஓணத்தை முன்னிட்டு படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு கொரோனா இரண்டாம் அலை கேரளாவில் தணியாத காரணத்தால் திரையரங்குகள் திறப்பு தள்ளிப் போய் மரக்கார் வெளிவரவில்லை.

தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். திரையரங்குகள் முன்பு பேசிய பணத்துக்கு படத்தை வாங்க தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் ஓடிடி யில் வெளிவரும் என்று பிரச்சனை பெரிதான நிலையில் கேரள அரசு தலையிட்டு பிரச்சனையை தீர்க்க முயன்றது. மரக்கார் திரையரங்கில் மட்டுமே வெளியாகும். படங்களை திரையரங்கில் வெளியிட வேண்டும் என்பதே கேரள அரசின் பாலிசி. திரையரங்கில் வெளியான பிறகு ஓடிடியில் வெளியிட்டுக் கொள்ளலாம். அடுத்த வருடம் அரசு சொந்த ஓடிடி தளத்தை தொடங்கும் என அமைச்சர் ஷாஜி செரியன் கூறியுள்ளார்.

சினிமா செய்திகள்