முதல் முறையாக ஆண்டவரை சந்தித்தார் பிரதமர் மோடி

முதல் முறையாக ஆண்டவரை சந்தித்தார் பிரதமர் மோடி

இன்று காலை வாடிகன் நகரில் போப் ஆண்டவரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 20 நிமிடங்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சுமார் மணி ஒரு நேரம் வரை நீடித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

போப் பிரான்சிஸை சந்தித்தது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “போப் பிரான்சிஸ் அவர்களுடன் மிகவும் அன்பான சந்திப்பு நடைபெற்றது. அவருடன் பலதரப்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, மேலும் அவரை இந்தியாவுக்கு வருமாறும் அழைத்தேன்.” 

அடுத்த ஆண்டு கோவா சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசியல் செய்திகள்