பொதுயிடங்களில் உளறுவதில் யார் பெரியவர் என்பதில் அதிமுகவுக்கும் பிஜேபிக்கும் இடையே கோபிநாத்தை வைத்து நீயா நானா போட்டியே நடத்தலாம்.
அதிமுகவில் உளறுவதில் பிஹெச்டி பெருமை பெற்ற திண்டுக்கல் சீனிவாசனை வைத்துக் கொண்டு அவரை மிஞ்சி எம்எல்ஏ ஒருவர் பேசியிருக்கிறார்.
திண்டுக்கல்லில் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற வேடசந்தூர் அதிமுக எம்எல்ஏ பரமசிவம் பேசுகையில் நாளைக்கு முதல்வராக கூடிய ஸ்டாலின் அனைவரையும் ஒரே பார்வையில் பார்க்க வேண்டும் என்று உளறி ! திண்டுக்கல் சீனிவாசனை அதிர்ச்சிகுள்ளாக்கினார்.