முதல்வர் சினிமாவில் நடிக்கிறாரோ?.. செல்லூர் ராஜூ

முதல்வர் சினிமாவில் நடிக்கிறாரோ?.. செல்லூர் ராஜூ

முதல்வர் ஜேம்ஸ்பாண்ட் போல ஒருமுறை வருகிறார், பேண்ட் சட்டையோடு ஒருமுறை வருகிறார், முதல்வர் நடிக்கிறாரோ? என பொதுமக்கள் நினைக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்துள்ளார். முன்னதாக, தனது தொகுதிக்குட்பட்ட மாடக்குளம் கண்மாய், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் நிரம்பி வருவதை பார்வையிட்டார்.

ஸ்மார்ட் சிட்டி, பணியில் ஊழல் என்றால் தற்போது ஆட்சி அதிகாரம் உங்கள் கையில் தானே இருக்கு, ஊழலை கண்டுடிக்க வேண்டியது தானே என்று ஸ்மார்ட் சிட்டி பணிகளை மதுரையில் மேற்கொண்ட தனது அமைச்சரவை சகா உதயகுமார் பக்கம் திமுகவின் கவனத்தை திசை திருப்பினார் ராஜூ.

அரசியல் செய்திகள்