மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் முழு அடைப்பு

மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் முழு அடைப்பு

வரும் 26ம் தேதி திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மத்திய அரசு, பஞ்சு, நுால் ஏற்றுமதியை உடனடியாக ரத்து செய்யவேண்டும். இந்திய பருத்தி கழகம், வர்த்தகர்களுக்கு, பஞ்சு விற்பனை செய்யக்கூடாது. பஞ்சு இறக்குமதி வரியை நீக்கவேண்டும். தமிழக அரசு, பருத்தி கொள்முதல் மையத்தை உருவாக்கி, நுாற்பாலைகளுக்கு சீரான விலைக்கு பஞ்சு வழங்க வேண்டும்,’ என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, 26ம் தேதி, ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் செய்திகள்