மத்திய அமைச்சரை மேடையேற்ற பயந்த பிரதமர்

மத்திய அமைச்சரை மேடையேற்ற பயந்த பிரதமர்

லக்கிம்பூர் விவசாயிகள் புகழ் ஆசிஷ் மிஸ்ராவின் தந்தையும் உள்துறை இணை அமைச்சரான அஜய் மிஸ்ரா லக்னோவில் நடைபெற்ற 56-வது டிஜிபி-க்கள்/ஐஜி-க்கள் மாநாட்டின் இறுதிநாள் கூட்டத்தில் பங்கேற்காதது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. மாநாட்டின் புகைப்படத்தை ட்வீட் செய்த காங்கிரஸ், “இதில் அஜய் மிஸ்ராவை காணவில்லை. உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் தனக்கு நேரும் தோல்வியைக் கண்டு நரேந்திர மோடி பயந்துவிட்டாரா?” என கேள்வி எழுப்பியுள்ளது.

பிரியங்கா காந்தி, அஜய் மிஸ்ராவுடன் மேடையைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும், அவரை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்குமாறும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது.

அரசியல் செய்திகள்