மதுரை மத்திய சிறையில் 100 கோடி ஊழல்

மதுரை மத்திய சிறையில் 100 கோடி ஊழல்

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமை மைய இயக்குனருமான பி.புகழேந்தி தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், மதுரை மத்திய சிறையில் சிறைக்கைதிகளால் மருத்துவ பொருட்கள், ஸ்டேஷ்னரி பொருட்கள் தயாரிக்கப்பட்டு அவை அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பியதாக கடந்த 2016 முதல் 2021 மார்ச் மாதம் வரை போலி கணக்கு தயாரித்து சுமார் 100 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கான ஆதாரங்கள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதில் அப்போதைய சிறைத்துறை கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்

அரசியல் செய்திகள்