போட்றா வெடிய” அதிமுகவினர் உற்சாகம்-அதிமுகவை பிடித்த பிஜேபி விலகுகிறது

போட்றா வெடிய” அதிமுகவினர் உற்சாகம்-அதிமுகவை பிடித்த பிஜேபி விலகுகிறது

பாரளுமன்ற, சட்டமன்ற மற்றும் சமீபத்தில் நடந்த ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வரை மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால், வேறு வழியின்றி பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு படுதோல்வியடைந்தது அதிமுக. பின்னர் பாஜகவால் தான் தோற்றோம் என்று அதிமுக நிர்வாகிகள் முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை சொல்லி வந்த நிலையில், தங்கள் சொந்த தேவைகளுக்காக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் பாஜக கூட்டணியை தொடர்ந்தனர்.

இந்நிலையில் தான், விரைவில் நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது போட்றா வெடிய என்று கொண்டாடும் அளவுக்கு அதிமுகவினரை உற்சாகப் படுத்தியுள்ளது.

அரசியல் செய்திகள்