பெகாசஸ் – தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் ஃப்ரீ பாஸ் கிடையாது – உச்ச நீதிமன்றம்

பெகாசஸ் – தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் ஃப்ரீ பாஸ் கிடையாது – உச்ச நீதிமன்றம்

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர், பல்வேறு பத்திரிகையாளர்கள், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தொடங்கி பல முன்னணி பிரபலங்கள், அரசியல் தலைவர்களின் போன்கள் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டு கேட்கப்பட்டதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு புயலைக் கிளப்பின.

நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுக்கு இந்த சாப்ட்வேர் விற்பனை செய்யப்படுவது இல்லை. எனவே இந்தியாவில் உள்ளவர்கள் உளவு பார்க்கப்பட்டிருந்தால் அது அரசுக்கு தெரியாமல் இருக்காது என்பது எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு.

தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான நீதிபதிகள் ஹிமா கோலி, சூர்யா காந்த் ஆகியோர் அமர்வு இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நிபுணர் குழு விசாரணை நடத்த வேண்டும் என்பது தீர்ப்பாகும். மனுதாரர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதையும், மத்திய அரசின் வாதம் ஏற்கப்படவில்லை என்பதையும் இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

உச்ச நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டு முதல் பெகாசஸ் உளவு தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளியிட மத்திய அரசுக்கு போதுமான அவகாசம் வழங்கப்பட்டது. எனினும் மத்திய அரசால் பிரமாணப் பத்திரம் மட்டுமே தாக்கல் செய்ய முடிந்தது. தேசிய பாதுகாப்பு காரணத்தை கூறி, ஒவ்வொரு முறையும் அரசு உளவு பார்க்க ஃப்ரீ பாஸ் பெற முடியாது என்றும் நீதிபதிகள் மத்திய அரசுக்கு அறிவுறுத்தினர்

அரசியல் செய்திகள்