பிட்காயின் மோசடியில் கர்நாடக பாஜக?

பிட்காயின் மோசடியில் கர்நாடக பாஜக?

அரசு வலைதள பக்கங்களை ஹேக் செய்ய முயற்சி, டார்க் வெப் மூலம் போதைப்பொருள் விற்பனை, அதற்கான பணத்தை கிரிப்டோ கரன்ஸியில் பெறுவது போன்ற தொடர் புகாரில் ஹேக்கர் ஸ்ரீகிரிஷ்ணா என்பவரை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கே, பிட்காயின் விவகாரத்தில் பசவராஜ் பொம்மை தனது பதவியை இழக்க நேரிடும் என்று கூறியுள்ளார். மேலும், இந்த அரசாங்கம் பிட்காயின் ஊழலை மிகவும் திட்டமிட்டு மறைக்க முயற்சிக்கிறது. இதில் பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள், அவர்களின் பிள்ளைகள், அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பல கோடி ஊழல், போதைப்பொருள் வழக்கு லஞ்சம், டிரான்ஸ்பர் லஞ்சம் பிட்காயின் மூலம் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலீட்டு மோசடிகளும் நடந்துள்ளன என்று கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

அரசியல் செய்திகள்