பா.ஜ.க.தலைவரை நாயுடன் ஒப்பிட்ட முன்னாள் கவர்னர்

பா.ஜ.க.தலைவரை நாயுடன் ஒப்பிட்ட முன்னாள் கவர்னர்

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் தோல்விக்கு, பா.ஜ.க பொறுப்பாளர் கைலாஷ் விஜயவர்கியா தான் காரணம். ‘திரிணமுல் காங்.,கில் இருந்து வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட, ‘சீட்’ வழங்கியது தவறு’ என, திரிபுரா முன்னாள் கவர்னரும், பா.ஜ.க மூத்த தலைவருமான ததகதா ராய் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

இதைத்தொடர்ந்து ராய் தன்னுடைய சமூக வலைதளத்தில் ‘வோடாபோன்’ மொபைல் சேவை நிறுவன விளம்பரத்தில் இடம்பெறும், ‘பக்’ இன நாயுடன், கைலாஷ் விஜயவர்கியாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், ‘மேற்கு வங்கத்தில் மீண்டும் வோடாபோன்’ என, கருத்து தெரிவித்து உள்ளார்.

அரசியல் செய்திகள்