பா.ஜ.க ஆட்சியில் தான் பொருளாதார வளர்ச்சி – அண்ணாமலை

பா.ஜ.க ஆட்சியில் தான் பொருளாதார வளர்ச்சி – அண்ணாமலை

தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த, பெட்ரோல், டீசல் விலை குறைப்பை, குறைக்காமல் உள்ளது. மக்களை முட்டளாக்கி ஏமாற்றி, ஆட்சிக்கு வந்திருப்பது உண்மையாகி விட்டது. தமிழக அரசின் கடன் சுமை 5.10 லட்சம் கோடி ரூபாய். இந்த ஆண்டு 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளது. ஒரு மாநிலம், அதன் மாநில மொத்த உற்பத்தியில் 25 சதவீதம் தான் கடன் வாங்க முடியும். இந்த அளவு அடுத்த ஆண்டு எட்டப்படும்.

இதே நிலை நீடித்தால், 2023ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க, அரசிடம் பணம் இருக்காது. பா.ஜ.,வின் ஏழு ஆண்டு ஆட்சியில் தான் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என்று பாஜக தலைவர் திமுக அரசை குற்றம் சாட்டி உள்ளார்.

அரசியல் செய்திகள்