பாண்டி CM ஏலத்திற்கு​ – திமுக

பாண்டி CM ஏலத்திற்கு​ – திமுக

எம்எல்ஏ, எம்.பி தொகுதிகளை தேர்தலின் போது தொழில் அதிபர்களிடம் பெரிய தொகைக்கு விற்று வந்த திமுக, இப்போது சற்று முன்னேறி மொத்த பாண்டிச்சேரி தொகுதிகளையும் நல்ல விலைக்கு பேசி ஜெகத்ரட்சகனிடம் விற்றிருக்கிறது.

காங்கிரஸ் தான் எப்போதும் பாண்டியின் மேஜர் பார்ட்னர் என்பதுடன் முதல்வர் பதவியும் அவர்களுக்கே செல்வதால், வணிக ரீதியாக பெரிய பலன் இல்லை திமுகவிற்கு.

காங்கிரஸை தமிழகத்தில் கழட்டி விடுவதற்கான வழியாகவும் இது இருக்கும் என்பதால், அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் புகழ்பெற்ற தொழிலதிபர் ஜெகத்ரட்சகனிடம் மொத்த விலைக்கு பாண்டிச்சேரி தொகுதிகளை பேசி இருக்கிறது திமுக.

பாண்டிச்சேரியில் உள்ள மொத்த வாக்காளர்களையும் விலைக்கு வாங்க கூடிய சக்தி இருப்பதால் ஜெகத்ரட்சகன் 30 தொகுதியிலும் வெற்றி பெற வைப்பேன் என்று கூறுகிறார்.

பாவம் நாராயணசாமி.

political Latest Trending News