பாஜக பிரமுகரிடம், பாஜக அமைச்சரின் முன்னாள் பிஏ மோசடி

பாஜக பிரமுகரிடம், பாஜக அமைச்சரின் முன்னாள் பிஏ மோசடி

ஆரணி பாஜக நகர தலைவராக உள்ள புவனேஷ் குமார் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், பாஜக அதிமுக கூட்டணியில் ஆரணியில் போட்டியிட ஆசைப்பட்டார், அதற்காக, அதிமுக வடசென்னை மாவட்ட நிர்வாகி மூலம், அப்போதைய பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளராக இருந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் உதவியாளர் நரோத்தமனை அணுகியுள்ளனர்.

நரோத்தமன் ஆரணி தொகுதியில் போட்டியிட தன்னால் எம்.எல்.ஏ சீட் வாங்கி தர முடியும் எனக்கூறி அதற்கு ரூ. 1 கோடி பேரம் பேசி, முதல் தவணையாக ரூ. 50 லட்சத்தை தி.நகரில் ஓட்டல் ஒன்றில் வைத்து பெற்றுள்ளார். ஆனால், ஆரணி தொகுதி அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு ஒதுக்கப்பட்டது.

நரோத்தமனிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட புவனேஷ்குமாரை, நரோத்தமன், அவரின் தந்தை சிட்டிபாபு ஆகியோர் மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். புவனேஷ் குமார், பாண்டி பசார் போலீசில் கொடுத்த, புகாரைப் பெற்ற போலீசார் ஹைதராபாத் சென்று அங்கு பதுங்கியிருந்த நரோத்தமன், சிட்டிபாபுவை கைது செய்தனர்.

அரசியல் செய்திகள்