பாஜக எந்த இடத்திலும் ஜெயிக்காது – லல்லு பிரசாத்

பாஜக எந்த இடத்திலும் ஜெயிக்காது – லல்லு பிரசாத்

பாஜக வின் பொய்கள் மக்களிடம் அம்பலமாகி விட்டது, எனவே, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உட்பட எந்த மாநிலத்திலும் பாஜக ஜெயிக்காது என்று ஆருடம் கூறியுள்ளார் லல்லு பிரசாத் யாதவ்.

வேற்றுமைகள் அனைத்தையும் மறந்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் வேளாண் விவகாரத்தில் இந்தியா முழுவதும் விவசாயிகள் ஒன்று திரண்டதைப் போல், ஒரு குடையின் கீழ் திரள வேண்டும் என்று கூறியுள்ள லல்லு உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தேர்தலில் சமாஜ்வாதி கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அங்கு யோகி அரசுக்கு எதிராகவே காற்று வீசுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் செய்திகள்