பாஜகவினர் நாய் இறந்தால் வருந்துவார்கள், விவசாயிகளுக்கு! – ஆளுநர்

பாஜகவினர் நாய் இறந்தால் வருந்துவார்கள், விவசாயிகளுக்கு! – ஆளுநர்

டெல்லியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் ஒரு நாய் இறந்தால் கூட அதற்கு இரங்கல் தெரிவிக்கிறார்கள். ஆனால் விவசாயிகள் மரணத்திற்கு யாரும் இரங்கல் தெரிவிக்கவில்லை. விவசாய போராட்டத்தில் 600 விவசாயிகள் வரை மரணம் அடைந்தனர். ஆனால் அவர்களுக்கு யாரும் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு குறித்து கடும் விமர்சனம் ஒன்றை மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் வைத்துள்ளார்.

டெல்லியில் போராடும் விவசாயிகள் வெறும் கையோடு திரும்ப மாட்டார்கள். அவர்கள் வெற்றியோடுதான் திரும்புவார்கள். ஒரு அநீதி இழைக்கப்படும் போது அதற்கு எதிராக மக்கள் போராடவே செய்வார்கள். விவசாயிகளின் மகன்கள் பலர் ராணுவத்தில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களையும் இந்த போராட்டங்கள் பாதித்து உள்ளது என்று ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார்.

அரசியல் செய்திகள்