பாஜகவினர் ஓட்டுக்காக,   தலித்துகளின் கால்களைக் கழுவி, அந்தத் தண்ணீரையே குடிப்பார்கள் – ஓம் பிரகாஷ்

பாஜகவினர் ஓட்டுக்காக, தலித்துகளின் கால்களைக் கழுவி, அந்தத் தண்ணீரையே குடிப்பார்கள் – ஓம் பிரகாஷ்

பாஜகவுக்கு ஓட்டு வேண்டுமென்றால் தலித்துகளின் கால்களைக் கழுவி விடுவார்கள். அந்தத் தண்ணீரையே குடிப்பார்கள். ஆனால் தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டால் பிணத்தை நள்ளிரவில் எரிப்பார்கள். குற்றவாளிகளை பாஜக காப்பாற்றும்.

பாஜகவுடன் இருந்தால், நீங்கள் என்ன குற்றங்களை வேண்டுமானாலும் செய்யலாம். சஞ்சய் நிஷாத் சமீபத்தில் பகவான் ராமர், தசரதனின் மகனே அல்ல என்றார், பாஜகவுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க தைரியம் இருக்கிறதா? துணை முதல்வர் தினேஷ் சர்மா, ‘சீதாதேவி டெஸ்ட் டியூப் பேபி’ என்றார், பாஜக என்ன செய்து விட்டது?. தற்போது உ.பியில் கிரிமினல்கள் மீது தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, குறிப்பிட்ட மதம், சாதியைச் சேர்ந்த கிரிமினல்கள் மீது மட்டும் நடவடிக்கை பாய்ந்து வருகிறது.

பாஜகவில் உள்ள 3 லாபிகளில் ஒன்று யோகி ஆதித்யநாத்தை தோற்கடிக்க பணியாற்றி வருகிறது. ஆனால் நான் 100% உறுதியாகக் சொல்கிறேன் அகிலேஷ்ஜி முதல்வராவார். பாஜகவை வெளியேற்ற அகிலேஷினால்தான் முடியும் காங்கிரஸ், பகுஜன்னால் முடியாது” என்கிறார் முன்னாள் பாஜக சகாவான ஓம் பிரகாஷ் ராஜ்பர்.

அரசியல் செய்திகள்