பட்டாசு தடை எந்த சமூகத்துக்கும் எதிரானது அல்ல – உச்ச நீதிமன்றம்

பட்டாசு தடை எந்த சமூகத்துக்கும் எதிரானது அல்ல – உச்ச நீதிமன்றம்

மகிழ்ச்சி என்ற போர்வையில் நீங்கள் [உற்பத்தியாளர்கள்] குடிமக்களின் வாழ்க்கையுடன் விளையாட முடியாது. நாங்கள் எந்த குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே நாங்கள் இங்கு இருக்கிறோம் என்ற வலுவான செய்தியை பதிவு செய்ய விரும்புகிறோம் என்று உச்ச நீதிமன்ற பெஞ்ச் கூறியிருக்கிறது. 

பட்டாசு தடையால் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும் என்ற காரணத்தால்,மற்ற குடிமக்களின் வாழ்வுரிமை  பாதிக்க அனுமதிக்கமுடியாது என்றும், அப்பாவி குடிமக்களின் வாழ்வுரிமையே எங்களின் முக்கிய நோக்கம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அனைத்து பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படவில்லை. பட்டாசு விற்பனைக்கு முழு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், உரிமம் பெற்ற வணிகர்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்றும், பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்க முடியும் என்றும் கூறியிருக்கிறது. ஆன்லைனில் பட்டாசு விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது
அரசியல் செய்திகள்