நீட் தேர்வு மேலும் ஒரு மாணவரை பலியாக்கியது

நீட் தேர்வு மேலும் ஒரு மாணவரை பலியாக்கியது

நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ், கனிமொழி, மற்றும் சௌந்தர்யா ஆகிய மூவரைத் தொடர்ந்து பொள்ளாச்சி அருகே முத்தூர் கிராமத்தை சேர்ந்த மாணவர் கீர்த்திவாசன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நன்றாக படிக்க கூடிய கீர்த்திவாசன் கடந்த 2 வருடங்களாக நடத்தப்பட்ட நீட் தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்த தேர்விலும் கலந்து கொண்டு தேர்வு எழுதிய கீர்த்திவாசனுக்கு தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என்ற மனஉளைச்சல் இருந்துள்ளது. இதனால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பாமகவின் அன்புமணி ராமதாஸ் இது தொடர்பாக ஒரு முக்கிய கோரிக்கையை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு விடுத்துள்ளார். அதில் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும் எனவும், இதற்காக தனிக்குழு அமைத்து ஆளுநர் மாளிகை, மத்திய அரசு ஆகியவற்றை தொடர்பு கொண்டு சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசியல் செய்திகள்