நீங்கள் டிக்டாக்கில் நடிக்கவில்லை. அவ்வளவுதான் அன்புமணி

நீங்கள் டிக்டாக்கில் நடிக்கவில்லை. அவ்வளவுதான் அன்புமணி

ஜெய் பீம் படத்திற்கு ராஜ்யசபா அன்புமணியைத் தொடர்ந்து, காடுவெட்டி குரு மகன், மருமகன், காயத்ரி ரகுராம் என்று நிறைய அல்லக்கைகள் சூர்யாவுக்கு கடிதாசி எழுதி வரும் நிலையில், பத்திரிகையாளர் நாச்சியாள் சுகந்தி அன்பு மணிக்கு எழுதியுள்ள மடலில், “அன்பின் அன்புமணி அண்ணனுக்கு, வணக்கம். மாநிலத்தில் நிலவும் பிரச்சனைகளை பேசாமல் நடிகருக்கு கடிதம் எழுத, அவர் பதில் சொல்ல….ஒரே நாளில் உங்கள் பிம்பம் சுக்குநூறாக உடைக்கப்பட்டுவிட்டது.

வடமாவட்டங்களில் இருக்கும் கிராமங்களுக்குச் சென்றால் உங்களுக்கு ஒரு உண்மை தெரிய வரும், பரையர்களும் வன்னியர்களும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான பொருளாதார நிலையில் தான் இருக்கிறார்கள் என்று. என்றைக்கு அய்யா தலித் அல்லாதோர் கூட்டணி ஆரம்பித்தாரோ அன்றே உங்கள் கட்சியின் அழிவு காலம் ஆரம்பித்துவிட்டது.

ஒரு தலைமுறையையே சாதி வன்மம் பிடித்தவர்களாக மாற்றியுள்ளீர்கள். எதிரொலியாக நீங்கள் கூட கையில் அக்னிசட்டியை பச்சை குத்தியுள்ளீர்கள். இன்னும் நீங்கள் டிக்டாக்கில் நடிக்கவில்லை. அவ்வளவுதான். இப்படிக்கு, பரையர் – வன்னியர் இணக்கம் நாடும் ஒருத்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் செய்திகள்