நில ஆக்கிரமிப்பு திமுக எம் பி மீது புகார்

நில ஆக்கிரமிப்பு திமுக எம் பி மீது புகார்

திமுகவின் கடலூர் மக்களவைத் தொகுதி எம் பி ரமேஷ், கொலை வழக்கில் சிறையில் உள்ள நிலையில், மேலும் ஒரு திமுக எம் பி மீது நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது. தேவதானம் பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான 2.5 ஏக்கர் விவசாய நிலத்தை ஒட்டி, தென்காசி தொகுதி தி.மு.க எம்.பி தனுஷ் எம்.குமார் நிலம் உள்ளது.

திமுக எம்.பி தனது நிலத்தினை ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனால் தனது விவசாய நிலத்திற்க்கு செல்ல பாதையில்லை எனவும், ஒரு கட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான 2.5 ஏக்கர் விவசாய நிலத்தை தனது பெயருக்கு மாற்றி எழுதி கொடு என எம் பி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கணேஷ் குமார் விருதுநகர் மாவட்ட  ஆட்சியர் மேகநாதரெட்டியிடம் புகார் அளித்துள்ளார்.

அரசியல் செய்திகள்