நில அபகரிப்பு – ஆரம்பித்தது திமுக ஆட்டம்

நில அபகரிப்பு – ஆரம்பித்தது திமுக ஆட்டம்

தென்காசி திமுக எம் பி மேல் நில அபகரிப்பு புகார் எழுந்துள்ள நிலையில், தற்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளரும், ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்றத் தலைவரும், ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலருமான இளையராஜா, மீது நில அபகரிப்பு புகார் ஒன்றை, தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துவேல் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளார். தனது விவசாய நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்து கல்தூண்கள் நட்டு தனது நிலத்தை இளையராஜா அபகரித்துக் கொண்டதாகப் புகார் அளித்துள்ளார். அனிதா ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களால், தொடர்ந்து புகழ் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அரசியல் செய்திகள்