நிர்வாணமாக தீபாவளி கொண்டாடிய அதிமுக முன்னாள் எம்.பி

நிர்வாணமாக தீபாவளி கொண்டாடிய அதிமுக முன்னாள் எம்.பி

நீலகிரி அதிமுக முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் நேற்றைய தினம் தீபாவளி அன்று தலைக்கேறிய போதையில் நிர்வாணமாக தள்ளாடியபடி முத்தாலம்மன் பேட்டை பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரின் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். வீட்டு உரிமையாளர் கோபி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பதிலுக்கு, கோபாலகிருஷ்ணனும் வாக்குவாதம் செய்ய, ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கோபி முன்னாள் எம்.பி-யை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். அத்துடன் நிர்வாண நிலையிலிருந்த கோபாலகிருஷ்ணனை தனது செல்போனில் வீடியோவும் எடுத்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, கோபி குன்னூர் காவல்நிலையத்தில் தான் பதிவு செய்த வீடியோவுடன் கோபாலகிருஷ்ணன் மீது புகார் அளித்தார்.அவரின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், வீட்டுக்குள் நிர்வாணமாக நுழைந்த முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் செய்திகள்