நிதியமைச்சர் போஸ்ட் வேணும் – மம்தாவை சந்தித்த சு.சுவாமி

நிதியமைச்சர் போஸ்ட் வேணும் – மம்தாவை சந்தித்த சு.சுவாமி

மூத்த பாஜக பிரமுகரான டீ பார்ட்டி புகழ் சுப்பிரமணிய சுவாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தில்லியில் நேரில் சந்தித்து பேசினார்.

சு. சுவாமி, மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம் பெற முட்டி மோதி பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. மனம் வெறுத்து போய் மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களை சராமாரியாக திட்டி வரும் சுவாமி, தற்போது மோடிக்கு எதிராக அணி திரட்டி வரும் மம்தா பானர்ஜியை சந்தித்து இருப்பது பாஜக வட்டாரத்தில் கலவரத்தை உண்டாக்கியுள்ளது. மேலும் சுவாமி பத்திரிக்கையாளர்களிடம் ‘நான் மம்தா பக்கம் தான்’ என்று வேறு கூறியுள்ளார். மோடியை சத்தாய்க்கவா அல்லது நிஜமாக மம்தாவுக்கான ஆதரவா என்று தெரியவில்லை.

அரசியல் செய்திகள்