நாம் தமிழர் அதிபர் மீது வழக்கு

நாம் தமிழர் அதிபர் மீது வழக்கு

தனக்கென்று ஒரு நாடு, தனக்கென்று ஒரு படை, தனக்கென்று தானாகவே உருவாக்கிய வரலாறு என்று கற்பனை லோகத்தில் லயித்திருக்கும் அதிபர் தற்போது தனக்கென்று ஒரு கொடியை உருவாக்கி ஏற்றி இருக்கிறார். அதை தவறென்று சொல்லி, தமிழ்நாட்டு மக்களிடையே மொழிவாரி பிரிவினையை ஏற்படுத்துதல், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காதது, அனுமதியின்றிக் கூட்டம் நடத்தியது என ஆறு பிரிவுகளில் (Cr.no: 577/2021 u/s 143,124 A, 153(A), 1(a), 505(1)(b), 269 IPC r/w 51(b)t) ) வழக்குப் பதிவு செய்துள்ளது அரசு. பாவம் அதிபர், சுதந்திர நாட்டில் ஒரு அதிபர், தனியாக கொடி வைத்துக் கொள்ள கூடாதா?

அரசியல் செய்திகள்